திருப்பூர் இச்சிப்பட்டி கோம்பக்காடுபுதூரை சேர்ந்த கலைச்செல்வி (39), இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தபோது, கூட்டரங்கு அருகே திடீரென மயங்கி விழுந்தார். அவருடன் வந்தவர்கள் தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த முயன்றனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, அவர் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.