இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

1பார்த்தது
இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
திருப்பூரில், திருமணம் முடிந்து கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த 19 வயது இளம் பெண், குடும்பப் பிரச்சனை காரணமாக திருப்பூர் வந்துள்ளார். வேலை கேட்டு அணுகிய அவரிடம், சக்தி குமார் என்பவர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தனது நண்பரின் அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில், சக்தி குமார் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி