திருப்பூர் கொங்கு மெயின் ரோடு திருநீலகண்டபுரத்தைச் சேர்ந்த ராமர் (54), பனியன் நிறுவன டெய்லர், நேற்று நண்பர் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஆட்டோவில் வீடு திரும்பும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.