அவினாசி: பஸ் மோதி தொழிலாளி பலி

85பார்த்தது
அவினாசி: பஸ் மோதி தொழிலாளி பலி
அவினாசி பெரியாயிபாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்த வர் கார்த்திக் (வயது 30). இவரது தந்தை பீட்டர் (70). கட் டிட தொழிலாளி. நேற்று பெருமாநல்லூர் அருகே கட்டிட வேலை செய்வதற்காக தனது ஸ்கூட்டரில் பெருமாநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். பாரதியார் நகர் அருகே சென்றபோது இவருக்கு பின்னால் திருப்பூரிலிருந்து கோபி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதியது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி