திருப்பூர் நகரில் மருத்துவ சேவையின் புதிய அத்தியாயமாக, அட்லாண்டிஸ் ஹெல்த்சிட்டி பன்னோக்கு மருத்துவமனை இன்று திறக்கப்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள இந்த ஸ்மார்ட் மல்டி-ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, உலகத் தர சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ளது. பொதுவான ஆலோசனைகள் முதல் சிக்கலான அறுவை சிகிச்சைகள் வரை அனைத்து சிகிச்சைகளும் ஒரே இடத்தில் வழங்கப்படும் வகையில் அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன் இந்த மருத்துவமனை செயல்படும்.