பெண்கள் தைரியமான, வீரதீர செயல் புரிந்தும், பெண்களின் நலனுக்காகவும், பாலின மேம்பாட்டுக்காகவும், துணிச்சலான சவால் நிறைந்த செயல்களை செய்ததற்கு கல்பனா சாவ்லா விருது வருகிற சுதந்திர தினத்தன்று வழங்கப்பட உள்ளது. தகுதியான நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக வருகிற 19-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விருதுக்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள், தங்களுடைய வீரதீர செயல்கள், புகைப்படங்கள், விருதுகள் குறித்த உரிய விவரங்கள் கொண்ட கருத்துருக்களை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண். 36-ல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்துக்கு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.