விடுமுறை நாட்களிலும் வரி செலுத்தலாம்

0பார்த்தது
விடுமுறை நாட்களிலும் வரி செலுத்தலாம்
திருப்பூர் மாநகராட்சி தனது நான்கு மண்டலங்களில் சொத்துவரி, காலி யிட வரி, குடிநீர் கட்டணம், தொழில்வரி, பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றைச் செலுத்த மக்களின் வசதிக்காக வார நாட்கள் மற்றும் அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி வசூல் மையங்களை காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படுத்துகிறது. இந்த வசதி நான்கு மண்டல அலுவலகங்கள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, குமரன் வணிக வளாகம், முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம் மற்றும் பாண்டியன் நகர் ஆகிய மையங்களில் பணமாகவோ அல்லது ஆணையாளர், திருப்பூர் மாநகராட்சி என்ற பெயரில் செலுத்தலாம்.

தொடர்புடைய செய்தி