சாமளபுரத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை அரிவாள் கொண்டு தாக்கி பணம் கொள்ளை வாலிபர் கைது.
சாமளாபுரம் அருகே உள்ள செந்தேவிபாளையம் பகுதியைச் சேர்ந்த கோபால்சாமி என்பவரின் மனைவி பூமணி (வயது 60). சம்பவத்தன்று பூமணியின் கணவர் கோபால்சாமி அந்தியூர் சென்றிருந்தார். இதனால் பூமணி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செய்யதுஅலி (20) என்பவர் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் பூமணி வீட்டிற்கு வந்து பக்கத்து தோட்டத்தில் வேலை செய்வதாக கூறி தண்ணீர் குடித்துச் சென்றுள்ளார். அன்று இரவு 11 மணிக்கு பூமணி வீட்டிற்கு வந்து கதவை திறக்குமாறு செய்யதுஅலி கூறியுள்ளார்.
பூமணி கதவை திறந்தபோது பணம் நகையை எடுக்கச் சொல்லி அரிவாளை திருப்பிப் பிடித்து தலை மற்றும் கையில் அடித்து பீரோவில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடிச் சென்றார். இதுதொடர்பாக மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து செய்யதுஅலியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.