திருப்பூர்: நண்பரை தாக்கிய வாலிபர் கைது

1160பார்த்தது
திருப்பூர்: நண்பரை தாக்கிய வாலிபர் கைது
திருப்பூர் கல்லாம்பாளையம் பகுதியில், கார்த்திகேயன் (28) என்பவர் தனது நண்பர் அப்துல் ரசாப்பிடம் (29) 4 டீ-சர்ட்டுகளை கொடுத்தார். மாலையில் அவற்றை கேட்டபோது, அப்துல் ரசாப் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அப்துல் ரசாப், கார்த்திகேயனை கட்டையால் தாக்கியதில் காயமடைந்த கார்த்திகேயன் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்புடைய செய்தி