திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ருசிகேஸ் புயான் (29) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.