திருப்பூர் வடக்கு போலீசார் ரயில் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகத்திற்கிடமாக நின்ற மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அப்பாஸ் அலி (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் விற்பனைக்காக 2 கிலோ புகையிலை பொருட்கள் இருந்ததை கண்டறிந்த போலீசார், அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.