திருப்பூர்: மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது

55பார்த்தது
திருப்பூர்: மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
திருப்பூர், முருகம்பாளையம் அடுத்த சுண்டமேடு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 42). பனியன் நிறுவன தொழிலாளி. கடந்த 9-ஆம் தேதி கனகராஜ் தனது மோட்டார் சைக்கிளை முருகம்பாளையம் டாஸ்மாக் அருகில் நிறுத்திவிட்டு சென்றார். 

பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் கனகராஜ் வீரபாண்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்தநிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த இளங்கோவன் (31) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் இளங்கோவன், முருகம்பாளையம் டாஸ்மாக் முன்பு நின்ற கனகராஜின் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் இளங்கோவனை கைது செய்து அவரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி