திருப்பூரில், வடமாநில இளைஞர்களிடம் தகராறு செய்து கத்தி மற்றும் கல்லால் தாக்கியதாக பனியன் நிறுவன தொழிலாளி முனீஸ்வரன் (31) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், போலீசார் அவரை ஓராண்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது.