திருப்பூர் : குடும்பப்பிரச்சினையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

59பார்த்தது
திருப்பூர்  : குடும்பப்பிரச்சினையில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருப்பூர் மாஸ்கோ நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து மதுரையில் வசித்து வந்தார். இவர்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தையும், 2 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. 

இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருப்பூர் மாஸ்கோ நகருக்கு வந்த கார்த்திக் தனது குடும்பத்தினருடன் தங்கி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மனஉளைச்சலில் காணப்பட்ட கார்த்திக் நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி