சாலை விபத்தில் வாலிபர் பலி

3பார்த்தது
சாலை விபத்தில் வாலிபர் பலி
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சிவகிரி பகுதியைச் சேர்ந்த 19 வயது பிரகதீஸ்வரன், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் நண்பர் வேல்முருகனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, செங்கப்பள்ளி அருகே சாலை ஓரம் நின்றிருந்த லாரியின் பின்புறம் மோதியதில், லாரியில் இருந்த இரும்புக் கம்பிகள் வயிற்றில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேல்முருகன் காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி