
பல்லடம்: போலி உரிமத்துடன் துப்பாக்கி; வங்கி காவலாளி கைது
திருப்பூரில் பெரியாயிபாளையத்தில் வசித்து வந்த பீகார் மாநிலம் முசாபர்பூரைச் சேர்ந்த உமேஷ் சிங் (55), பல்லடம் ரோட்டில் உள்ள வங்கியில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்தார். இவர் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, தெற்கு போலீசார் அவரை ஒரு மாதத்திற்கு முன்பு கைது செய்தனர். திருப்பூரில் உள்ள வங்கிகளில் போலி உரிமத்துடன் துப்பாக்கி வைத்திருக்கும் வேறு யாரேனும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.








































