
உடுமலை கால்வாயில் அதிக அளவு தண்ணீர் திறப்பு- பயிர்கள் நாசம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இந்திரா நகர் பகுதியில் உடுமலை கால்வாயில் இருந்து 12.15 என்ற இடத்தில் கரை உடைந்து பாசன நீர் வீணாகும் அளவிற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அருகில் நடவு செய்யப்பட்டிருந்த வெங்காயப் பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவு தண்ணீரைத் திறந்து விட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.




































