உடுமலை அரசு மருத்துவமனைக்கு 10 குப்பை தொட்டிகள் வழங்கல்!!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு துர்கா அறக்கட்டளை சார்பில் ரூ. 6000 மதிப்புள்ள 10 குப்பை தொட்டிகள் தலைமை மருத்துவரின் வேண்டுகோளுக்கிணங்க வழங்கப்பட்டன. துர்கா அறக்கட்டளை தலைவரும் உடுமலை தெற்கு ஒன்றிய பாஜக தலைவருமான ஈஸ்வரசாமி நேரில் தலைமை மருத்துவரிடம் குப்பை தொட்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் அரசு மருத்துவமனை ஊழியர்கள் உடனிருந்தனர்.