திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் திருப்பூர் தெற்கு இந்து முன்னணி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் உடுமலையில் நடைபெற்றது. பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். அத்துடன் கோரிக்கையை வலியுறுத்தி இந்து முன்னணியினர் கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16 பேரை உடுமலை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர்.