திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மூலம் பல்வேறு மாநில லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாக காவல்துறைக்கு புகார் வந்தது.
இந்த நிலையில் பள்ளபாளையத்தை சேர்ந்த சிவக்குமார், புதுக்கோட்டையை சேர்ந்த முரளி, நாமக்கல்லை சேர்ந்த ஸ்ரீநாத், திருவள்ளுவரைச் சேர்ந்த பொன்ராஜ், உடுமலையை சேர்ந்த தமிழ்மணி ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 36 கேரளா லாட்டரி சீட்டுகள் ஒரு செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்