திருப்பூர் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள சுமார் 10 அடி ஆழமுள்ள குளம் ஒன்று தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், குளத்தில் உள்ள தாமரைப்பூக்களைப் பறிக்கச் செல்லும் குழந்தைகள் தவறி விழும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனால், உயிர்களைப் பலி வாங்கும் இந்தக் குளத்தைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.