திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பைபாஸ் சாலையில், ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. இந்த சாலையில் உள்ள பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து, மோசமான நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் உடைந்து விழும் அபாயத்தில் இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இதனால், பொதுமக்கள் பாதாள சாக்கடை மூடியை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி உள்ளனர்.