உடுமலை சென்னை விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் அவசியம்

0பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக தினமும் இயக்கப்படும் பாலக்காடு-சென்னை ரயிலுக்கு உடுமலை, மடத்துக்குளம் பகுதி பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. மடத்துக்குளம் பகுதியில் ரயில் நிற்காததால், பயணிகள் உடுமலை வந்து ரயிலில் ஏறிச் செல்கின்றனர். வார விடுமுறை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருப்பதால், பாலக்காடு-சென்னை ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி