திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து தென் மாவட்ட நகரங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். தற்போதுள்ள ரயில்களில் போதுமான இடவசதி இல்லாததாலும், பண்டிகை விடுமுறை நாட்களில் ஏற்படும் நெருக்கடியாலும் பயணிகள் சிரமப்படுகின்றனர். எனவே, உடுமலை வழியாக தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என உடுமலை ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்து மனு அளிக்கப்பட்டுள்ளது.