திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பள்ளபாளையம் பகுதியில் வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு மேற்கொண்டபோது, பாளையக்காரர்களின் கற்சிற்பங்கள் மற்றும் சுமார் 2000 ஆண்டுகள் பழமையான கற்திட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. உடுமலை வரலாற்று ஆர்வலர்கள் மற்றும் மத்திய தொல்லியல் துறை ஆய்வாளர் ஓய்வு பெற்ற மூர்த்தீஸ்வரி குழுவினர் இந்த கண்டுபிடிப்புகளை ஆவணப்படுத்தியுள்ளனர்.