திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குருவப்பநாயக்கனூர் நியாய விலை கடை விற்பனையாளரான மாற்றுத்திறனாளி சரவணா குமார், பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சேவையைப் பாராட்டி, உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, குருவப்பநாயக்கனூர் பொதுமக்கள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்வில் சமூக சேவகர் ஆதவன் சிவக்குமார் கலந்துகொண்டார்.