உடுமலை ராமச்சந்திராபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு

3பார்த்தது
உடுமலை ராமச்சந்திராபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு பாராட்டு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஜீவா, பள்ளி விளையாட்டு மைதானத்தில் வெள்ளிச் செயின் ஒன்றைக் கண்டெடுத்தார். அதை உடனடியாக தலைமை ஆசிரியரிடம் ஒப்படைத்தார். விசாரணையில், அது அதே பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் சூர்யாவிற்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. பின்னர், செயின் மாணவர் ஜீவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவர் ஜீவாவின் நேர்மையைப் பாராட்டிய தலைமை ஆசிரியர், அவருக்கு இனிப்புகள் வழங்கிப் பாராட்டினார்.

தொடர்புடைய செய்தி