உடுமலை பேருந்து நிலையத்தில் வாக்குவாதம்.. பரபரப்பு

1747பார்த்தது
உடுமலை பேருந்து நிலையத்தில், திருப்பூருக்குச் செல்ல வேண்டிய தனியார் பேருந்து முன்கூட்டியே புறப்பட்டதால், டைம் கீப்பர் பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, தனியார் பேருந்து ஓட்டுநர் டைம் கீப்பரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் இரு தரப்பினரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி