உடுமலை அருகே காட்சி பொருளாக ஏடிஎம்

83பார்த்தது
உடுமலை அருகே காட்சி பொருளாக ஏடிஎம்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சியில் கனரா வங்கி கிளை உள்ளது. இந்த வங்கியை ராமச்சந்திராபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஏடிஎம் பழுதடைந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பணம் எடுக்க பொதுமக்கள் பல கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏடிஎம்ஐ திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி