திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வருகின்ற 4ஆம் தேதி வேளாண் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இதில் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர்கள் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து உரையாற்ற உள்ளனர். உடுமலை பகுதி விவசாயிகள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு உடுமலை வேளாண்மை உதவி இயக்குனர் தேவி தெரிவித்துள்ளார்.