உடுமலை அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை

67பார்த்தது
உடுமலை அருகே தார் சாலை அமைக்க பூமி பூஜை
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் - உடுக்கம்பாளையம் முதல் புங்கமுத்தூர் வரை இருந்த தார்சாலை முற்றிலும் சிதிலமடைந்து பொதுமக்கள் போக்குவரத்தை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 

சாலையைப் புதுப்பித்துத் தரக்கோரி பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரும் உடுக்கம்பாளையத்தில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு நிகழ்வின்போது மேற்படி தார்சாலையை விரைவில் புதுப்பித்துத் தரப்படும் என உறுதியளித்தார். அதன்படி ரூ. 84.76 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. பணியைத் துவக்குவதற்கான பூமி பூஜை நேற்று மாலை நடைபெற்றது. மேற்படி நிகழ்வில், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவரும், மாவட்டச் செயலாளருமான இல. பத்மநாபன், பாராளுமன்ற உறுப்பினர். ஈஸ்வரசாமி, ஒன்றிய செயலாளர் செழியன், ஆணையாளர் சிவகுரு, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், ஒன்றியப் பொறியாளர் திரு. பெருமாள், ப. வெற்றிவேல் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

உடுக்கம்பாளையம் முதல் குண்டலப்பட்டி வரை உள்ள பழுதடைந்த தார்சாலையையும் புதுப்பித்துத் தரவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி