திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இநாம் திட்டத்தின் கீழ் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 19 விவசாயிகள் கொண்டு வந்த 1,532 கிலோ எடையுள்ள 3502 தேங்காய்களை 5 வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக ரூ. 71.50, குறைந்தபட்சமாக ரூ. 56, சராசரியாக ரூ. 62 என மொத்தம் ரூ. 91,182-க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.