திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் 270 மூட்டைகளில் 13,500 கிலோ கொப்பரை தேங்காயை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். அதிகாரிகள் தெரிவித்த தகவலின்படி, முதல் தர கொப்பரை தேங்காய் ரூ. 138.19க்கும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் ரூ. 105.32 முதல் ரூ. 130.11 வரையிலும் விற்பனையானது.