திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று கொப்பரை தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் 21 விவசாயிகள் 258 மூட்டை (12,900 கிலோ) கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 9 வியாபாரிகள் பங்கேற்ற இந்த ஏலத்தில், முதல் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 120 முதல் ரூ. 126.20 வரையிலும், இரண்டாம் தர கொப்பரை தேங்காய் கிலோ ரூ. 87.69 முதல் ரூ. 118.20 வரையிலும் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.