உடுமலை அருகே தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்பு

1322பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஆத்துகிணத்தம்பட்டி கௌரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த 10 அடி ஆழம், 4 அடி அகலம் கொண்ட தொட்டியில் 8 அடி தண்ணீர் இருந்தது. இந்த தொட்டியில் தவறி விழுந்த பசுமாட்டை உடுமலை தீயணைப்புத்துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த பசுமாடு விவசாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி