திருப்பூர் மாவட்டம் உடுமலை தளி ரோடு ரயில்வே மேம்பாலம் அருகில் சுரங்கப் பாதை உள்ளது. இதன் வழியாக அரவிந்த் மருத்துவமனை, பாலாஜி நகர் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பொதுமக்கள் சென்று வருகின்றனர். சுரங்கப் பாதையில் பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே அதை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.