உடுமலை அருகே சேதம் அடைந்த சுற்றுச்சுவர்

2பார்த்தது
உடுமலை அருகே சேதம் அடைந்த சுற்றுச்சுவர்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ஆமந்தக்கடவு ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம் ஒரே வளாகத்தில் இயங்கி வருகின்றன. கடந்த சில மாதங்களாக இந்த அலுவலகங்களின் சுற்றுச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே, சேதமடைந்த சுற்றுச்சுவரை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி