திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று மாலை அணிவித்து விரதத்தை துவக்கினர். அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், குருசாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர். பின்னர் பஜனை பாடல்கள் பாடி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.