உடுமலை மல்பெரி செடிகளில் நோய் தாக்குதல்

1பார்த்தது
திருப்பூர் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெண்பட்டு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகள், மல்பெரி செடிகளில் ஏற்படும் பல்வேறு நோய் தாக்குதல்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பட்டுக்கூடு உற்பத்தி விலை சரிந்துள்ளது. முன்பு நாளொன்றுக்கு 45 டன் வரை கிடைத்த வெண்பட்டுக்கூடு உற்பத்தி தற்போது 20 டன்னாக குறைந்துள்ளது. இதன் விலை அதிகபட்சமாக 900 ரூபாய் வரை விற்ற நிலையில், தற்போது பாதியாக குறைந்துள்ளது. இந்த நிலைமைக்கு தீர்வு காண பட்டுவளர்ச்சித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி