திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள அரசு மருத்துவமனை முன்பு கருணைக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்வு இன்று 1000வது நாளை எட்டியுள்ளது. இதனையொட்டி, இட்லி, கோதுமை ரவை உப்புமா, பொங்கல், சாம்பார், சட்னி உள்ளிட்ட சிறப்பு உணவுகள் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் அறக்கட்டளை நிர்வாகிகள் அர்ச்சனா, மணிகண்டன், உமாதேவி மற்றும் உறுப்பினர்கள் கருணாகரன், திருமதி சசிகலா, வெங்கடாஜலபதி, மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.