உடுமலையில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருப்பூர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்ற திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி திமுக நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டத்தில், நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மருது கணேஷ், உடுமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மு. ஜெயக்குமார், தொகுதி பார்வையாளர் தமிழ்மறை, மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.