உடுமலை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

2195பார்த்தது
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே எலையமுத்தூரைச் சேர்ந்த விவசாயி கமலக்கண்ணன், நேற்று மாலை அவரது வீட்டுக்குள் புகுந்த 3 மர்ம நபர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டார். பின்னர், அவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த கமலக்கண்ணன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அமராவதி நகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காரில் தப்பிச் சென்ற மர்ம நபர்களைத் தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி