திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், மத்திய அரசின் உரவிலை உயர்வை ரத்து செய்யவும், மாநில அரசு கூட்டுறவு பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்யவும் வலியுறுத்தி ஒருங்கிணைந்த விவசாய சங்கங்களின் சார்பில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் சௌந்தரராஜன், பாலதண்டபாணி, சண்முகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.