திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள செல்வி கேஸ் ஏஜென்சிஸில் பாரத் கேஸ் வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு இணைப்புக்கான கைரேகை பதிவு முகாம் நடைபெற்றது. முகாமினை உரிமையாளர் ஐயப்பன் துவக்கி வைத்தார். இதுவரை கைரேகை பதிவு செய்யாத வாடிக்கையாளர்கள் தங்களது இணைப்பை புதுப்பித்துக் கொண்டனர். வாடிக்கையாளர்கள் தாமதமாக பதிவு செய்தாலும் சிலிண்டர் கிடைக்காது என அச்சப்பட வேண்டாம் என்றும், சிலிண்டர் தேவைப்படும் போது மட்டும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.