திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 14 இளநிலை பட்டப் படிப்புகளில் 864 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் மாணவர்கள் எட்டு பேர், தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள், விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த மாணவர் என மொத்தம் 19 பேர் பல்வேறு இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்ந்தனர். நாளை நான்காம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறுள்ளது.