தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பணத்தம்பட்டி தங்கராஜ் தலைமை தாங்கினார். மேலும், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார் மற்றும் வர்த்தக அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.