திருப்பூர் மாவட்டம் உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி வணிகவியல் துறை 3-ம் ஆண்டு மாணவிகள் சார்பாக ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டைகள் உருவாக்குவதற்கான முகாம் தளிபேரூராட்சியில் நடைபெற்றது.
மூத்த குடிமக்களுக்கு சம உரிமையை வழங்கி, அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், சுகாதாரப் பாதுகாப்பைப் பெறுவதை ஆயுஷ்மான் பாரத் திட்டம் உறுதி செய்கிறது. மேலும் 70 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்களின் மருத்துவ அவசர நிலைகளைப் பூர்த்தி செய்வதே திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாமின் மூலமாக தளிபேரூராட்சியில் உள்ள பொதுமக்கள் பயன் அடைந்தனர்.