திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில், அகில இந்திய மாநில அரசு சம்மேளனத்தின் முடிவின்படி வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசரமாக மேற்கொள்ள வலியுறுத்தியும், இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் உடுமலை அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் வெங்கடபதி, சகிலா பானு, தாசன், எலிசபெத், ராஜேந்திர பூபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.