திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட 15வது வார்டில், ஜெய்லானி காலணியில் சாக்கடைகள் முறையாக கட்டப்படாததால் கொசுத் தொல்லை அதிகரித்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இப்பகுதி மக்கள் உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளனர்.