திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெதப்பம்பட்டி, கொங்கல் நகரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தற்போது இடைவிடாமல் கனமழை பெய்து வருவதால், கடும் வெப்பத்தால் தவித்த பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.